சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

mugam pala palakka
ப ப்பாளிப் பழம் கண்களுக்கு மட்டும் இல்லீங்க.. அது உடலுக்கு அதிக நன்மை தரும் பழம். அதை சாப்பிடும் முறையில் சாப்பிட்டால் உடலில் தேவையான சத்துக்கள் சேர்ந்து, நோய் எதிர்ப்பு சக்தி கூடி, அந்தபழத்தைப் போல தோலின் நிறம் மினுமினுப்பு அடைந்து ஒரு சினிமா நடிகர் போன்ற தோற்றத்தினை பெற்றிடலாம். சினிமா நடிகைகளின் பாலிசான உடலை நீங்களும் பெற்று அழகாக காட்சி அளிக்கலாம்.

பப்பாளி செய்யும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போமா? 


இளம் வயதில் இருக்கும் சிலருக்கு அவர்களின் முகத்தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக வயதான தோற்றம் உள்ளதாக எண்ணி வருத்தத்தில் இருக்கின்றனர்.

இவர்களின் வருத்தத்தை போக்குவதற்கு, நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி உலரவிட்டு வேண்டும். பின்னர் முகத்தை கழுவினால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, பொலிவு பெரும்.



மனதளவில் அதிகளவு பதற்றம் அடைபவர்கள் மற்றும் நரம்பியல் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு நரம்பு தளர்ச்சியானது ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு தினமும் காலையில் பப்பாளி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியானது விரைவில் குணமடையும்.

இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையானது இயற்கையாகவே பப்பாளி பழத்திற்கு உண்டு. சுற்றுப்புற சூழ்நிலையால் உருவாகும் நோய்களை எளிதில் குணப்படுத்தும் அல்லது கிருமிகளை அழிக்கும் சக்தி உண்டு.

வாரத்திற்கு இரண்டு முறை பப்பாளியை உண்டு வர நோய் தொற்றானது ஏற்படாமல் உடல் நலமானது பாதுகாக்கப்படும்.

எந்த ஒரு மனிதனுக்கும் வயிறானது எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் செயல்பட்டு வந்தால் பல விதமான நோய்களில் இருந்து தப்பிக்க இயலும்.

காலையில் எழுந்தவுடன் தினமும் பப்பாளி பழத்தை உண்டு வந்தால் அஜீரண கோளாறு என்றும் ஏற்படாது. மலச்சிக்கல் மற்றும் மூல நோய் குறைபாடு இருக்கும் நபர்கள் பப்பாளி பழம் சாப்பிட்டு வர நன்மையடையலாம்.

பப்பாளியில் பொட்டாசியம் சத்தானது அதிகளவில் உள்ளது. இதன் மூலமாக நரம்புகளின் இறுக்கும் தன்மை ஏற்படும் பிரச்சனைகள் இருந்து தடுக்கப்பட்டு, இதயத்திற்கும் தேவையான பொட்டாசியத்தை வழங்குகிறது. இரத்த அழுத்தத்தை சீரான நிலையில் நிலைநிறுத்துவதன் மூலம் உடல் நலமானது பாதுகாக்கப்டுகிறது.

நமது உடலில் இருக்கும் கல்லீரல் அதிகளவு நச்சுக்கள் தங்குவதாலும், அதீத சுழற்சி முறையின் காரணமாக கல்லீரலில் வீக்கமானது ஏற்படுகிறது.

இதனை தீர்ப்பதற்கு பப்பாளி பழமானது அதிகளவில் உபயோகப்படுகிறது. காலை மற்றும் மதிய நேரத்தில், பப்பாளி பழத்தை சாப்பிட்டு வரவே, கல்லீரல் இருக்கும் கிருமிகளானது நீங்கி கல்லீரல் குணமாகி நமது உடல் நலமும் பாதுகாக்கப்படும்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்