தூங்கும்போது உங்களுக்கு இப்படி நடக்குதா? அப்போ இந்த குறைபாடா இருக்கலாம் !

thokka kuraipadu
அனைவருக்குமே தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். தூக்க பற்றாக்குறை ஏற்படும்போது அது உங்கள் உடலில் பல விதத்தில் எதிரொலிக்கும்.

அதேபோல உங்கள் தூக்க பழக்கவழக்கங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி கூறுவதாக இருக்கும். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

தூக்கத்தில் சிறுநீர் அடிக்கடி வருகிறதா?

இந்த பிரச்சினை ஏற்பட முக்கிய காரணம் தூங்குவதற்கு முன் அதிக தண்ணீர் குடிப்பதாகும். ஆனால் இது மற்ற ஆரோக்கிய பிரச்சினைகளுடனும் தொடர்பு கொண்டதாக இருக்கலாம்.

இந்த பிரச்சினை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் இது சர்க்கரை நோயாகவோ அல்லது புரோஸ்ட்ரேட் விரிவாக்க நோயாகவோ இருக்கலாம்.



அடிக்கடி விழிக்கிறீர்களா?

நீங்கள் தூக்கத்தில் அடிக்கடி விழிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் உங்களுக்கு ஒரு சீரான தூக்க முறை வேண்டும். கஷ்டப்பட்டாவது தினமும் ஒரே நேரத்தில் எழும் பழக்கத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.

சரியான நேரத்திற்கு தொடர்ச்சியாக விழிக்கும் போது நீங்கள் படுக்கைக்கு செல்லும் நேரமும் சரியான நேரத்திற்கு மாறும். தினமும் வெவ்வேறு நேரத்திற்கு எழுவது உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

எழும்போது சோர்வாக இருக்கிறீர்களா?

நன்றாக தூங்கி எழுந்த பின்னரும் சோர்வாக இருப்பதற்கு பல காரணம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தூங்க செல்வதற்கு முன் நீங்கள் உணவெடுத்து கொள்ளும் நேரமாகும். குறைவான நார்ச்சத்துக்கள், அதிகளவு சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் இருக்கும் உணவை சாப்பிடுவது அடிக்கடி உங்களை தூக்கத்தில் விழிக்க வைக்கும், மேலும் உங்களை எழுந்தவுடன் சோர்வாக உணரச்செய்யும்.

குறட்டை

சுவாச பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு தூக்கத்தில் குறட்டை, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.இதனால் பகல் நேர தூக்கம், தொண்டைப்புண், காலைநேர தலைவலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடல் எடை அதிகமிருப்பதும், மரபணு கோளாறுகளும் இந்த பிரச்சினைகள் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும். இது டைப் 2 சர்க்கரை நோயாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

காலில் அரிப்பு

நள்ளிரவில் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் பாதத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற உணர்வுகள் தோன்றலாம். அது அமைதியற்ற கால்கள் நோய்க்க்கான அறிகுறி ஆகும். காலை தொடர்ந்து அமைதியற்ற நிலையில் வைத்திருப்பது இந்த நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணமாகும். மாலை நேரங்களில் மது மற்றும் காஃபைன் பானங்களை தவிர்ப்பது இந்த நோயை ஓரளவிற்கு கட்டுப்படுத்தும்.


நிச்சயமாக போதுமான தூக்கம் இருந்தால் மேற்கண்ட குறைகள் ஏதும் இல்லாமல் நலமுடன் இருக்கலாம். தூக்கம் ஒரு நல்ல மருந்து. சரியான #தூக்கம் மற்றும் #நல்ல #உணவுகள் எடுத்துக்கொண்டால் உடல் உபாதைகள் ஏதுமின்றி 100 ஆண்டுகள் கூட வாழ முடியும். 

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்