உணவு லேபில்கள் சொல்வது என்ன?

food labels description

நாம் உணவு பொட்டலங்கள் வாங்கும்போது, அதில் சில பல தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதில் உள்ள சொற்களுக்கு என்ன விளக்கம் என தெரிந்துகொள்வோம். அதில் ஊட்டச்சத்து தகவல்களை தவிர,  இடம்பெற்றுள்ள வேறு புதிய சொற்களுக்கு விளக்கம் இதோ:


நோ ஃபேட் அல்லது ஃபேட் பிரீ: 1/2 கிராமுக்கு குறைந்த கொழுப்பு உள்ளது.

லோயர் அல்லது ரெட்யூஸ்டு ஃபேட்: மூல உணவுடன் ஒப்பிட்டால் 25 சதவீதம் குறைந்த கொழுப்பு

லோ- ஃபேட்: 3 கிராமைவிட குறைவாக லைட்: மூன்றில் ஒரு பங்கு கலோரி அல்லது மூலப்பொருளை காட்டிலும் பாதி அளவு கொழுப்பு

நோ கலோரீஸ் அல்லது கலோரி ஃபிரீ: 5 கலோரியைவிடக் குறைவாக உள்ளது

லோ கலோரி: மூலப்பொருளைவிட மூன்றில் ஒரு பங்கு கலோரி உள்ளது

சுகர்- ஃபிரீ: 1/2 கிராமைவிட குறைவான சர்க்கரை உள்ளது

ரெட்யூஸ்டு சுகர்: மூலத்தைவிட 25 சதவீதம் குறைந்த அளவில் உள்ளது.

நோ பிரிசர்வேடிவ்ஸ்: வேதி, இயற்கை பதப்படுத்தி சேர்க்கப்படவில்லை

நோ பிரிசர்வேடிவ்ஸ் ஆடட்: வேதி பதப் படுத்தி இல்லை, உப்பு அல்லது வினிகர் போன்ற இயற்கை பதப்படுத்தி உண்டு

லோ சோடியம்: 140 மில்லிகிராமுக்குக் குறைவாக உப்பு உள்ளது.

நோ சால்ட் அல்லது சால்ட் ஃபிரீ: 5 கிராமுக்கு குறைவாக உப்பு உள்ளது

ஹை ஃபைபர்: 5 கிராம், அதற்குக் கூடுதலான நார்ச்சத்து உள்ளது

குட் சோர்ஸ் ஆஃப் ஃபைபர்: 2.5 கிராம் முதல் 4.9 கிராம் நார்ச்சத்து உள்ளது

மோர் அல்லது ஆடட் ஃபைபர்: 2.5 கிராமுக்கு அதிகமாக நார்ச்சத்து உண்டு

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்